என்எம்சி: இந்தியா முழுவதும் 113 மருத்துவக்கல்லூரிகள் தொடங்கவுள்ளதாக என்எம்சி அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் மட்டும் 5 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கவுள்ளனர். இந்தியாவில் நாம் புதிதாக மருத்துவக்கல்லூரிகளை தொடங்க வேண்டும் என்றால் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். தற்போது இதற்கான அனுமதியை மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையம் வழங்கி இருக்கிறது. என்எம்சி அனுமதி வழங்காத பட்சத்தில் மருத்துவக்கல்லூரி தொடங்க முடியாது. அது மட்டுமில்லாமல் கல்லூரிகளில் மாணவர்களையும் சேர்க்க முடியாது. அதன்படி தமிழகத்தில் புதிய 5 மருத்துவக்கல்லூரிகள் […]
தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டங்கள் 2014 முதல் 2019 வரை அறிவிக்கப்பட்டவை என்றும்,அதன்பின் 7 ஆண்டுகளாகியும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,மயிலாடுதுறை,தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இல்லை என்பதால் அவற்றில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதி கோரலாம் எனவும்,இது குறித்து மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சு நடத்த […]
ஆகஸ்ட் 16 ஆம் தேதியிலிருந்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலின் தன்மை அதன் தாக்கம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (6-8-2021) தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் […]
வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்த 80 மாணவர்களுக்கு சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பயிற்சி பெற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு படித்து முடித்த மாணவர்கள், மத்திய அரசு நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், அதன் பிறகு ஒரு ஆண்டு சொந்த மாநிலத்தின் மருத்துவமனைகளில் பயிற்சி பெற வேண்டும். அதன் பின்னரே மருத்துவர்களாக பணியாற்ற முடியும். அந்த வகையில் வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை பயின்ற 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களை பயிற்சி […]