மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் இருக்கும் மாணவர்கள் பொறியியல் கல்லூரியை தேர்வு செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்க விரும்பிய மாணவர்களுக்கு நீட் தேர்வு அடிப்படையில் போதுமான கட் ஆப் மதிப்பெண் இல்லை. இதனால், மருத்துவம் படிக்கலாம் என்ற கனவோடு இருந்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்காத சூழ்நிலை உருவாகியது. இறுதிவரை இடம் கிடைக்கும் என்று காத்திருந்த மாணவர்களுக்கு கலந்தாய்வு முடிந்து ஏமாற்றமே மிஞ்சியது. […]
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்து வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் இன்று முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கவுன்சிலிங் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ தேர்வு குழு செயலர் செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நாளை முதல் 13ம் தேதி வரை நடைபெறும். கவுன்சிலிங் தொடர்பான விரிவான அட்டவணை www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற […]