மகாராஷ்டிரா:வரதா அருகே பாலத்திலிருந்து கார் கீழே விழுந்ததில் பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம்,செல்சுரா அருகே பாலத்தில் இருந்து கார் விழுந்ததில் பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேல் உட்பட 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஏழு இளைஞர்களும் சங்வியில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அவர்கள் வார்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது,அவர்கள் பயணித்த வாகனம் பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.முதற்கட்ட […]
அதிமுக படைத்த சாதனையை முதல்வர் தனது சாதனை போல் காட்டிக் கொள்ளும் முதல்வர்,”உண்மை எனும் கைவிளக்கே சான்றோர்க்கு வழிகாட்டும் விளக்கு” என்பது போன்று நடந்து கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசின் 60 விழுக்காடு நிதியுதவியுடன் இராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், திருப்பூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க மத்திய அரசின் ஆணையைப் […]
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இளம் மருத்துவர்களின் எதிர்காலத்தை நிபந்தனைகள் பாதிக்க கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2021-22ஆம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50% சேவை ஒதுக்கீட்டில் சேர்வதற்கான தகுதி குறித்த நிபந்தனை இளம் மருத்துவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் 2021-22ஆம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில்,அரசு […]
மருத்துவ படிப்பில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல். சென்னை எழும்பரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லுரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவித்தார். அதன்படி, 1,650 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை மருத்துவ கல்லுரிகளில் தலா 150 இடங்களுக்கு உடனே […]
உலகில் உள்ள 100 சிறந்த மருத்துவக்கல்லூரிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 மருத்துவக்கல்லூரிகள் தேர்வாகியுள்ளது. உலகின் மிக சிறந்த 100 மருத்துவக்கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 6 மருத்துவ கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி 23 ஆவது இடத்தையும், புனே ராணுவ மருத்துவ கல்லூரி 34 ஆவது இடத்தையும், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரி 59 ஆவது இடத்தையும், வாரணாசியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் […]
மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு கல்லூரிகளை சேர்க்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வாசுதேவா என்பவர், மருத்துவ கலந்தாய்வில் புதிய 11 அரசு கல்லூரிகளை சேர்க்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். 2020-2021 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் கலந்தாய்வு நடைபெற்று வருகின்ற நிலையில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளார். அந்த மனுவில், 11 புதிய அரசு […]
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.447.32 கோடி செலவில் அரசு மருத்துவ கல்லூரி அமையவுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம்மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், ஊட்டி வனப்பகுதியில் அமையவுள்ள மருத்துவ கல்லூரி க்காக அங்கு 1,838 அயல்நாட்டு மரங்களை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியள்ளது. கல்லூரி அமையவுள்ள 25 ஏக்கரில் மண் சார்ந்த மரங்கள் ஏதும் இல்லை, 90% யூக்கலிப்டஸ் மரங்களே என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. வெட்டப்படும் […]
தஞ்சையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் வீடு திரும்பினார்கள். கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 24506 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 775 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் என ஐந்து மாவட்டங்களில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. […]
கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சிக்கு ரூ.382 கோடியும், அரியலூருக்கு ரூ.347 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 9 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்து. மத்திய அரசு இந்தியா முழுவதும் 2020-21-ம் ஆண்டில் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசு சார்பாக அறிக்கை தயார் செய்து மத்திய […]
ராமநாதபுரத்தில் ரூ .325 கோடி மதிப்பில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த அடிக்கல் நாட்டுவிழாவில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மருத்துவ கல்லூரி 22 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இந்த அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ராமநாதபுரத்தில் ரூ .325 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த மருத்துவ கல்லூரி 22 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இந்த அடிக்கல் நாட்டுவிழாவில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளார்கள். இந்த அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மொத்தம் 24 மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், மொத்தம் 3350 மருத்துவ இடங்கள் உள்ளன. இது போக கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் என புதிய 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. தற்போது மேலும், 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, […]
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறுவதாக இருந்த மருத்துவ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா செஷன் தெரிவித்துள்ள செய்தியில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகதின் கீழ் இயங்கும் மருத்துவ கல்லூரிகளில் MBBS , பல் மருத்துவம் மற்றும் B.pharm ஆகிய துறைகளுக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அன்றைய தினம் வேலூர் தொகுதிக்கான தேர்தல் நடைபெற […]
பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது என்று உத்தரவுவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது என்று மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் விசாரித்த உயர்நீதிமன்றம் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிகள் குறித்து […]
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மாணவ ,மாணவியர்களால் எழுதப்பட்டு அதற்கான முடிவுகள் சமிபத்தில் வெளியானது. இதில் வெள்ளிச்சந்தை அருகேயுள்ள அருணாச்சலா பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியை சேர்ந்த சிவதேவ், ஏஞ்ஜெலின் ஜெனிட்டா, கார்த்திகா, மதன், அட்சை பகவத், நித்ய பாரதி, சிர்பின் லால் ஆகியோர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதியவர்களில் 58 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.