பருவகாய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுதுவம் வாரந்தோறும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7 வாரங்கள் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. மொத்தம் 16,516 முகாம்கள் நடைபெற்றுள்ளன. 7,83,443 பேர் பயன்பெற்றுள்ளனர். 3772 பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று 3000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன . இன்று சென்னை வேளச்சேரி பகுதியில் நடைபெற மருத்துவ முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு துவங்கி வைத்தனர். […]
மிக்ஜாம் புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மக்களுக்கு ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் டிசம்பர் 14 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும். காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி […]
பருவகால மழை நோய்களை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறையால் கடந்த அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் வாரந்தோறும் 1000 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 5வது வார மருத்துவ முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக்தில் டெங்கு பாதிப்பு, மருத்துவ முகாம்கள், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். மருத்துவ முகாம்கள் : அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் […]
தமிழகம் முழுவதும் மழைக்கால பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் மழைக்கால பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 48,187 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் 3,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 5 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். மேலும் அவர் பேசுகையில், கால்பந்து வீராங்கனை […]
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் கோட்டம் 1வது வார்டு மேலூர் அய்யனார் துவக்கப்பள்ளி, அரியமங்கலம் கோட்டம் 64வது வார்டு திருவெறும்பூர் மாநகராட்சி பள்ளி, பொன்மலை கோட்டம் 42வது வார்டு பெரியார் மணியம்மை உயர்நிலைப்பள்ளி மற்றும் கோ-அபிசேகபுரம் கோட்டம் 58வது வார்டு உறையூர் ஆல் செயின்ட் பள்ளி ஆகிய பகுதிகளில் இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் நல பிரிவு, மகப்பேறு பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, கண்கள் , தோல், சித்த மருத்துவம், […]