விமல் நடிப்பில் உருவாகியுள்ள கன்னிராசி திரைப்படத்தினை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகர் விமல் நடிப்பில் நேற்று வெளியாகவிருந்த திரைப்படம் கன்னிராசி .இந்த படத்தின் தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமையை படத்தின் தயாரிப்பாளரான ஷமீன் இப்ராஹிம் மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.அதற்கு மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீத் ரூ.17 லட்சத்தை தயாரிப்பாளருக்கு வழங்கியுள்ளார் . தயாரிப்பாளர் அளித்த ஒப்பந்தத்தின் படி திரைப்படம் 2018-க்குள் வெளியாகவில்லை.இந்த நிலையில் படத்தினை நேற்று வெளியிட படக்குழுவினர் […]