விசாகப்பட்டினம் : கடந்த 2013-ம் ஆண்டு தேஜா மற்றும் நக்ஷத்ரா இருவரும் திரைத்துறையில் ஒரு வேளை தொடர்பாக சந்திப்பின் போது காதலித்து பின் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவார்கள். இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், அவர்களது உறவில் சிறுது சிறிதாக பிளவு ஏற்பட்டுள்ளது. மேலும், நக்ஷத்ர தங்களது உறவில் எந்த ஒரு பெரிய விரிசல் வந்துவிட கூடாதென்று பல முறை தேஜாவை கண்டித்திருக்கிறார். ஆனாலும், தேஜா சில புறம்பான விஷயங்களில் ஈடுப்பட்டு […]
பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மீது பாஜக மரியாதை கொண்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் பத்திரிக்கைகளின் பங்கு இன்றியமையாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு. நல்லவற்றை எடுத்துரைத்து அல்லவற்றை கண்டித்து சுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும் வழங்கி,மக்களின் […]
தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம், எனவே மக்களை அச்சுறுத்தாமல் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என ஊடகங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிக அளவில் காணப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொரோனாவை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமை செயலாளர் இறையன்பு, செய்தி ஆசிரியர்கள், காட்சி ஊடக ஆசிரியர்கள் ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை […]
ஹத்ராஸ் மாவட்டத்தை சார்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் பதினைந்து நாட்கள் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29 அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், அந்த இளம் பெண் கிராமத்திற்குள் ஊடகங்களை நுழைய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழக்கமால் இருந்த நிலையில், இறுதியாக இன்று ஊடகங்களுக்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 1 […]
முன்னணி சமுக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளது. இன்று உலகமக்கள் அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்று இருக்கின்ற இத்தகைய சமுக ஊடகங்கள் இளைய தலைமுறையினரை கட்டிப்போட்டு வைத்துள்ளது என்றே சொல்லலாம். அப்படி சமூக ஊடகங்களில் ஒன்றிப்போனவர்களுக்கு, அவற்றின் இந்த முடக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடும். அப்படி ஒரு நிகழ்வு இன்று அதிகாலை நடந்துள்ளது. இன்று உலகம் முழுவதும் சரியாக நள்ளிரவு 12 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை […]
பிரபலமான தமிழ் திரையுலகின் காமடி நடிகர் தான் விவேக். இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், சமூக சேவைகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் விவேக் புகைப்படத்தை வைத்து, வெளியில் சுற்றாதீர்கள் போன்ற சில மீம்ஸ்களை தயாரித்து போட்டனர் நெட்டிசன்கள். இதற்க்கு பதிலளித்துள்ள விவேக், இது போல தேவை இல்லாமல் வெளியில் சுற்றி ஆபத்தை விலை கொடுத்து வாங்குபவர்கள் மனம் திருந்தும் வகையில் memes போடுங்கள் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு, இது போல தேவை […]
அண்மையில் அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது ,ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் கருத்து பெறும் பரபரப்பை அக்கட்சிக்குள் ஏற்படுத்தியது. இதனால் ஒற்றைத்தலைமை குறித்து கட்சியினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.அதில்,அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது. ஒற்றை தலைமை விவகாரத்தை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் ஊடகங்களில் கருத்து […]
அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் ஊடகத்தின் மீது நடத்தும் தாக்குதல், அமெரிக்காவுக்கு ஆபத்து விளைவிக்கும் என அமேசான் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்திதாளின் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ஜனநாயகத்தின் முக்கியத்துவமமான சமூக நெறிகள் மற்றும் பாதுகாப்பு மீது ட்ரம்ப் தாக்குதல் நடத்துகிறார் என்று குற்றஞ்சாட்டினார். மேலும் ஊடகங்களை தீய சக்திகளாகவும், மக்களுக்கு எதிரானவையாகவும், குறுகிய காலம் கொண்டவை என அதிபர் டிரம்ப் வர்ணித்து வருவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். […]
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா மீண்டும் சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இரண்டு இடங்கள் பின்தங்கி 138 வது இடத்திற்கு இறங்கி உள்ளது. 2016-ம் ஆண்டில் இவ்வரிசையில் 133 வது இடம் பிடித்த இந்தியா தொடர்ச்சியாக சரிவையே சந்திக்கிறது. பயங்கரவாதம், பல்வேறு குழப்பங்களை எதிர்க்கொள்ளும் பாகிஸ்தான் 2017-க்கான தரவரிசையில் 139 வது இடத்தை பிடித்து உள்ளது. அதாவது இந்தியா, பாகிஸ்தானைவிட ஒரு இடம் மட்டுமே முன்னிலை பெற்று உள்ளது. 180 நாடுகளில் பத்திரிக்கையாளர்களுக்கான சுதந்திரம், […]
பெரும்பாலும் பெண்களுக்கு இடுப்புவலி என்பது புதிதல்ல.பெண்கள் வீட்டுவேலை செய்வதாலும் மாதவிடாய் சமயத்திலும் அதிகமாக பயணத்திலும் மாடிப்படி ஏறுவதாலும் மற்றும் பல்வேறு காரணங்கலாலும் பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்ப்படுகிறது. இந்த இடுப்பு வலி நீங்க அருமையான மருந்து இதோ தேவையான பொருட்கள்: சீரகம் மல்லி கருஞ்சீரகம் சதைகுப்பை கிராம்பு தேன் செய்முறை: 20கிராம் மல்லி வறுத்தது, க.சீரகம் 1ஸ்பூன்,கிராம்பு 1ஸ்பூன்,சீரகம் 1ஸ்பூன், சதைகுப்பை 1/2ஸ்பூன் எடுத்து அனைத்தையும் கலந்து பொடியாக அரைத்து எடுத்து வைக்கவும். பின்பு அதை 1ஸ்பூன் அளவு எடுத்து […]