கொரோனா வைரஸ் காரணமாக இந்திய முழுவதும் மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்களின் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் வாங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இறைச்சி கடைகளை மீண்டும் செயல்பட அனுமதி அளித்துள்ளார். தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என ராஜாமணி எச்சரிக்கை அளித்துள்ளார்.
சமண மதத்தை தோற்றுவித்த மகாவீர் நிர்வான் நாள் இந்தியா முழுவதும் அக்டோபர் 28-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.அன்றைய தினத்தில் ஆடு, மாடு போன்ற இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து இறைச்சி கடைகளும் , வணிக வளாகங்களில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளையும் விற்பனை செய்ய வேண்டாம் எனவும் அரசு உத்தரவை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.