பாகிஸ்தானின் பேச்சு கண்டனத்திற்குரியது என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்திய உள்நாட்டு விவகாரம் குறித்த பாகிஸ்தானின் பேச்சு கண்டனத்திற்குரியது.காஷ்மீரில் எந்த மருத்துவமனையிலும் மருந்து பற்றாக்குறை இல்லை, ஒருவர் கூட உயிரிழக்கவில்லை . காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு எதுவும் நடத்தப்படவில்லை, அங்கு நிலைமை தொடர்ந்து சீராகி வருகிறது என்று ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.