விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,உயர்மின் கோபுர திட்டங்களால் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும், வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், விவசாயிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், உயர்மின் கோபுரத்திற்குப் பதிலாக சாலை ஓரமாகக் கேபிள் அமைத்து, மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகள், அறவழியில் போராடி வருகின்றார்கள். கடந்த […]
கேடுகெட்ட மூன்று விவசாயச் சட்டங்களையும் மோடி அரசு ரத்துச் செய்ய வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 62 நாட்களாக நியாயமான கோரிக்கைகளுக்காக வாட்டி வதைக்கும் உறை பனியில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். உலகில் எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட போராட்டம் நடந்தது இல்லை. குடியரசு தினமான இன்று விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சை மத்திய அரசு நடத்தி இருக்கிறது. […]
மதிமுக தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என்று வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.குறிப்பாக கூட்டணி தொடர்பான பேச்சுக்கள் விறுவிறுப்பாக நடைபெற தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த முறை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் தங்களது கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகளை இரட்டை இலை மற்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில் கூட்டணி கட்சிகளும் அதன்படி […]