சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாகவும், சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று பெய்த இடைவிடாத மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவு, தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஒத்திகை சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் […]
சென்னை : இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த உயிரிழப்புகள் பற்றியும், சென்னை மெரினாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். […]
சென்னை : நவம்பர், டிசம்பர் மாதம் நெருங்குகிறது என்றாலே பருவமழையும் தமிழகத்தை நெருங்கிறது என்று முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் தற்போது உள்ளது. ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ள மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தபடுவதற்கு 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்திருந்தார். சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், ” 156 பேட்டரி […]
சென்னை : ஆண்டுதோறும் நவம்பர் , டிசம்பர் மாதம் வருகிறது என்றாலே பருவமழை பொழியும், குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் அதிகளாவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இப்படியான சூழலில் ஆண்டுதோறும் அதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது. இந்தாண்டும் பருமவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டு சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு […]
பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக மேயர் பிரியா காயமின்றி தப்பிய நிலையில் கார் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேயர் பிரியா சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணம் மேற்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரின் கார் விபத்தில் சிக்கியது. மேயரின் கார், முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதிய நிலையில் பின்னால் வந்த லாரி, மேயர் பிரியாவின் […]
சென்னை மாநகராட்சிக்கான 2024–25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ரிப்பன் மாளிகையில் இன்று தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெற்றது. அப்போது, 82 அறிவிப்புகளை கொண்ட சென்னை மாநகராட்சியின் 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநகராட்சி மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில் கல்வி, பெண்கள், தொழில் மற்றும் மருத்துவ சேவைகள் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சியின் 2024–25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். கூவத்தூர் […]
தமிழ்நாடு அரசின் 2024-25ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்முறையாக நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதன்பின் நேற்று தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நான்காவது முறையாக தாக்கல் செய்து வைத்தார். இதனிடையே, சென்னை மாநகராட்சி 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் கடந்த 9ம் தேதி சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற நிலையில், இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், […]
அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள். என அமைச்சர் உதயநிதிக்கு சென்னை மேயர் பிரியா வாழ்த்து. சென்னை சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சென்னை மாநகர மேயர் ப்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில், அமைதியாய் இருந்தாலும், அடக்கமாய்த் திகழ்ந்தாலும், […]