மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த மூன்றரை வயது சிறுமி , அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அப்போது அந்த சிறுமி கத்தியதால் சிறுமியை அந்த சிறார் கடுமையாக தாக்கியுள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு சார்பில் குழந்தை வளர்ப்பு பற்றி ஒருநாள் முகாம் நடைபெற்றது. […]