மாயத் தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என ஈபிஸ் அறிக்கை. அதிமுகவின் முதல் எம்.பியான 88 வயதான மாயத்தேவர் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவிற்கு அதிமுகவினர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மாயத்தேவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக துவக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில், 1973-ஆம் ஆண்டில் கழகம் முதன் […]