அண்டை நாடான இலங்கையில் மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பலியான தமிழ் ஈழ மக்களுக்காக 10 ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ‘மே 17’ இயக்க தலைவர் திருமுருகன் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்நிலையில் இவர் மீது போலீசார் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசியதாகவும்,விதிகளை மீறி பேசியதாகவும் கூறி இரண்டு பிரவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். DINASUVADU
தனது திறமையான நடிப்பின் மூலமும், நக்கலான மேடை பேச்சுக்கள் மூலமும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் பாகுபலி 1&2 திரைப்படத்தில் சத்யராஜ் ஏற்று நடித்த கட்டப்பா கதாபாத்திரம் இந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார். இவர் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்திற்கு ‘தீர்ப்புகள் விற்க்கப்படும்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நேற்று மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி இப்பட தலைப்பை அறிவித்தார். source : cinebar.in
மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று அதிகாலை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து தமிழக போலிசாரால் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். இந் நிலையில் இன்று திருமுருகன் காந்தியை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கபட்டார். ஐ.நாவில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் விடுதலை புலிகள் மீதான தடை உள்ளிட்டவற்றை பேசிவிட்டு நாடு திரும்பு போது பெங்களூரு விமான நிலையத்தில்கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்