மத்தியப் பிரதேச அமைச்சரவை குறித்து இரண்டு, மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் கமல் நாத் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல் நாத் அண்மையில் பதவியேற்றார். முக்கிய தலைவர்கள் பலரும் தங்களது ஆதாரவாளர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருவதால் அமைச்சரவையை தேர்வு செய்வதில் கமல் நாத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், […]
சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் , தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது. இன்று காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மத்திய பிரதேசம் முன்னணி நிலவரம்: காங்கிரஸ் : 92 பாஜக: 86 பி.பகுஜன் சமாஜ் கட்சி -3 […]
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 10 சதவீதமாகவே உயர்த்துவதே இலக்கு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சயீப் மசூதியில், தாவூதி போஹ்ரா சமுதாயத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- தொழில்நுட்பம் நம்மை ஒற்றுமைபடுத்தும் சக்தியாக திகழ்கிறது. அமைதியை எட்ட அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இங்கு உரையாற்றுவது பெருமை அளிக்கிறது. இந்தியா தனது வரலாறை நினைத்து பெருமை […]
முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியதால்தான் தேர்தலில் தோற்றோம்: பாஜக எம்எல்ஏ மத்தியப் பிரதேசம் , முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியதால்தான் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்தோம் என்று மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளும் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் […]