சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுரை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் மதுரை மதிச்சியம் பகுதியில் நேற்று இரவு 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, மதிச்சியம் பகுதியில், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த […]