நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 12 மாதம் காலம் மகப்பேறு விடுப்பு வழங்குவதை உறுதி செய்ய உத்தரவு. ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 270 முதல் 362 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு தொடர்பாக கூட்டுறவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கும் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும் எனவும், 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு அனுமதிக்கத் தேவையான சிறப்புத் துணைவிதி திருத்தம் மேற்கொள்ளப்படுவது, மற்றும் அது […]
பெண் பணியாளர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெயிட்டுள்ளது. வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தத்தெடுப்பு விடுப்பிற்கு நிகராக மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை […]
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் மகப்பேறு விடுப்புக்கான கால அளவவானது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு 1 வருடமாக உயர்த்தப்பட்டது.இந்த விடுப்பை பிரசவத்துக்கு முன்,பின் என பிரித்து அரசு ஊழியர்கள் எடுத்துக் கொள்ளவும்,விடுப்பு சமயத்தில் அவர்களுக்கு முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,அரசு ஊழியர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும்,குழந்தை பிறந்து சிறிது காலம் கழித்து இறந்து விட்டாலும் அவர்களுக்கும் 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு […]
தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை கடந்த 2011 ஆம் ஆண்டில் 6 மாதங்களாக உயர்த்துவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்பின் 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்று 2016 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை விதி 110 கீழ் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார். இதனையடுத்து,தேர்தல் அறிக்கையில் கூறியவாறு கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் மகப்பேறு விடுப்புக்கான கால அளவவானது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 1 […]
மகப்பேறு விடுப்பில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக தமிழக அரசு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசாணையை அமல்படுத்த கோரிய வழக்கறிஞர் ராஜகுரு வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்த அரசாணையை அமல்படுத்த வழக்கு தொடுக்கப்பட்டது. இதனிடையே, அரசு பணியில் […]