பஞ்சாப் மாநிலம், லூதியானாவின் கன்னா பகுதி அருகே எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மேம்பாலத்தில் தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடினர். இந்த தீ விபத்தில் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். தீ விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு நிலைமை கட்டுக்குள் […]
குருகிராமில் உள்ள பிலாஸ்பூர் தொழில்துறை பகுதியின் பினோலா கிராமத்தில் உள்ள வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் தீயை இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை என தீயணைப்பு அதிகாரி கூறியதாக முதற்கட்டமாக கிடைக்கப்பெற்ற தகவல் தெரிவிக்கிறது . இந்த விபத்தானது வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் பிரிவில் அதிகாலை 4:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தற்பொழுது வரை 30 க்கும் மேற்பட்ட […]