‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியாவில் மட்டுமல்லாமல் இங்கிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது .மாருதி சுஸூகி பலினோ. இந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னனியில் இருக்கும் நிறுவனம் மாருதி சுஸூகி. இந்நிறுவனம் 2015ஆம் இந்தியாவிலேயே இந்த காரை தயாரித்து விற்பனைக்கு வெளியிட்டனர். ப்ரீமியம் ஹேட்ச்பேச் மாடலாக வெளிவந்த பலினோ மாடல் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்கு ஆசிய நாடுகள் என ஏற்றுமதி விற்பனையில் கெடிகட்டி பறக்கிறது. […]