தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் மாரி 2. இத்திரைப்படம் மாரி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாகவும், மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாகவும், நடிகர் கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்திலிருந்து முதல் பாடல் ரவுடி பேபி ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று காலை இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. […]