இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பணச் சந்தையை உள்ளடக்கிய நிலையில்,கொரோனா தொற்றுக்கு முன்னதாக இருந்த வர்த்தக நேரங்களை மீட்டெடுத்துள்ளது.அதன்படி,ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தைகளில் ஏப்ரல் 18 (நேற்று) முதல் காலை 9 மணிக்கு வர்த்தகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பல்வேறு சந்தைகளுக்கான வர்த்தக நேரம் ஏப்ரல் 7,2020 அன்று மாற்றப்பட்டது,அதன்படி,சந்தைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில்,தற்போது அவற்றை மாற்றி பழைய நேரத்திலேயே தொடங்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]
ரூ.20 கோடி மதிப்பில் 10 மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தென்காசி பாவூர் சத்திரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி. விவசாயிகளின் நலனுக்காக ரூ.20 கோடி மதிப்பில் 10 மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். விவசாயிகள் பயிரிடம் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக பிரமாண்ட சந்தை அமைக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும்ம் நெல்லை மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு சந்தையை கட்ட அரசு பரிசீலிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.