2-ம் கட்ட பேச்சுவார்த்தை….!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு…!!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை 2-ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில், பகல் 12 மணியளவில் நடைபெறவுள்ளது. மேலும், இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த பின்பு, தேர்தல் குறித்த உடன்பாடு எட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.