ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் தலைமைத் தேர்தலில், 85.9% வாக்குகளுடன் அவர் வெற்றி பெற்றார். இதற்கு முன்னதாக பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். ஜனவரி 7-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அவர் ” தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கான விருப்பம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் உள்ள […]