சென்னை : இந்த ஆண்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறார். பாராலிம்பிக்கில் தொடரில் கலந்து கொண்டு வெள்ளி மட்டும் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி, மணிஷா, நித்யஸ்ரீ உள்ளிட்டோருக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை வழங்கினார். இதுவரை இல்லாத அளவிற்கு பாராலிம்பிக் தொடரில் இந்த ஆண்டு இந்திய அணி 29 பதக்கங்களைக் கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தது. அதில், 7 தங்கப்பதக்கமும், 9 வெள்ளிப்பதக்கமும் மற்றும் 13 […]
சென்னை : பிரான்ஸ் நகரின் தலைநகரான பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில், உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய தமிழக வீரரான தங்கவேலு மாரியப்பன் வெண்கல பதக்கம் வென்றார். மேலும், தொடர்ச்சியாக 3 முறை பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனால், முதல் முறையாக தொடர்ச்சியாக ஹாட்ரிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மாரியப்பன் தங்கவேலு : சேலம் மாவட்டத்தில் பெரியவடக்கம்பட்டி எனும் […]
சென்னை : நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். தொடர்ச்சியாக 3 பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் 17-வது பாராலிம்பிக் தொடரில் நேற்று 6-ஆம் நாளுக்கான போட்டிகள் நடைபெற்றது. அதில், பாரா தடகளத்தில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாகத் […]
பாரிஸ் : மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் தொடரானது இன்று பாரிஸில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. உலகம் முழுவதும் மிகப்பெரிய விளையாட்டு தொடராகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்று முடிவடைந்திருந்து. அதனைத் தொடர்ந்து இன்று இரவு பாரிஸில் பாராலிம்பிக் தொடரானது கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தமாக 180 நாடுகளில் 4,440 வீரர்/வீராங்கனைகள் பங்கேற்று விளையாடவுள்ளனர். இந்த தொடரில் இந்தியா சார்பாக மொத்தம் 84 வீரர், வீராங்கனைகளுடன் களமிறங்கவுள்ளனர். கடந்த 2020 பாராலிம்பிக் தொடரில் இந்திய […]
மு.க.ஸ்டாலின்: சீனாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட பாரா ஒலிம்பிக் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்க தொகை வழங்கியுள்ளார். மாற்று திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது ஜப்பானில் உள்ள கோபே நகரத்தில் நடைபெற்றது. இதில்100 நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினார்கள். இந்த தொடரில் தடகள வீரரான தமிழகத்தை சேர்ந்த ‘பாரா’ தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு கலந்துகொண்டு தங்கம் […]
சென்னை : மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாரா ஒலிம்பிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது. மாற்று திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது ஜப்பானில் உள்ள கோபே நகரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 100 நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த பாராலிம்பிக்ஸ்ஸின் 6-வது நாளான நேற்றைய நாளில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து […]
மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியான பாரா ஆசியா விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது . இந்த போட்டியில், இந்தியா சார்பில் 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தமாக 302 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி நேற்று தொடங்கிய நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில், சைலேஷ் […]
மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப் 1 பிரிவில் அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதன்படி,தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தொடந்து இரண்டாவது முறையாக பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். தற்போது நடந்து முடிந்த பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் 1.86 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார். தற்போது இவரது சொந்த ஊரான சேலம் அருகே உள்ள பெரிய வடகம்பட்டிக்கு திரும்பியுள்ள […]
தமிழக முதல்வரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிறகு சென்னை வந்த மாரியப்பன், அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. 10 நாட்களுக்கு பிறகு பயிற்சி தொடங்கவுள்ளேன். இந்த முறை பாராலிம்பிக்கில் மழை பெய்ததால் சற்று இடையூறாக இருந்தது. […]
அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக தங்க பதக்கம் வென்று வருவேன் என ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் நம்பிக்கை. டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், பதக்கம் வென்ற மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த முறை தங்கத்தை எதிர்பார்த்து சென்றேன். ஆனால், மழை பெய்ததால் சற்று இடையூறு ஏற்பட்டது. அதனால், வெள்ளி பதக்கம் வென்றதாக தெரிவித்தார். அடுத்த ஒலிம்பிக்கில் கண்டிப்பாக தங்க பதக்கம் வென்று வருவேன். […]
தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்குபவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருவது வழக்கம். அந்தவகையில், இந்த விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. அதில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் […]
கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள். கடந்த 2016 பிரேசில் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மா உட்பட 5 பேருக்கு உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி காணொளி மூலம் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி. தமிழக […]
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர் வினேஷ் போகட், டேபிள் டென்னிஸ் வீரர் மாணிகா பத்ரா பெயரையும் பரிந்துரைத்துள்ளது தேர்வுக்குழு. மேலும், விளையாட்டு துறையில் உயரிய விருதான ரஜீவகாந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா பெயர் […]