அர்ஜுனனின் ஆறும் வைப்பாறு ஆறும் ஓடும் பாதைகளுக்கு இடையே அமைந்துள்ளது இருக்கன்குடி மாரியம்மன் ஆலையம். இரு ஆறுகளும் கங்கையாக கருதப்படுவதால் ‘இரு கங்கை குடி’ என்றே கூறப்பட்டு வந்தது. அது மருவி இருக்கன்குடி என பெயர் வந்தது. பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் கடந்து வந்த கரடு முரடான பாதையில் மகாலிங்க மலை அடிவாரத்தை அடைந்தனர். அப்போது, உடனிருந்தவர்கள் களைப்பால் நீராட வேண்டும் என நினைத்தார்கள். ஆனால், அங்கு நீரோடை நதிகள் எதுவும் இல்லை. […]