மும்பை கடற்படை போர்க்கப்பலில் நேற்றிரவு ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பை கடற்படை தளத்தில் கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ரன்வீர் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. நேற்று மாலை 4.30 மணி அளவில் அந்த கப்பலில் திடீரென வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தின் போது கப்பலில் இருந்த 3 கடற்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கப்பலில் நடந்த வெடி விபத்துக்கும், கப்பலில் […]