யூடியூப்பர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து- மதுரை கிளை உத்தரவு..!
யூடியூப்பர் மாரிதாஸ் மீது நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பதியப்பட்டிருந்த வழக்கு மதுரை கிளை ரத்து செய்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 2–ஆம் தேதி மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவில், தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்பினார்கள் என பேசியிருந்தார். இது குறித்து நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில், கடந்த வாரம் போலீசார் இவ்வழக்கில் மாரிதாஸை கைது செய்தனர். பின்னர், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாரிதாஸை டிசம்பர் 30 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் […]