மார்கழி மாதத்தின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை ;மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்றும் கூறுவார்கள் .சூரிய பகவான் வியாழ பகவான் வீட்டில் சஞ்சரிக்கும் மாதம் ஆகும் .மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலமாக சொல்லப்படுகிறது. கிருஷ்ண பரமார்த்தா அர்ஜுனனை பார்த்து மாதங்களில் நான் மார்கழியாக உள்ளேன் எனக் கூறியுள்ளார். இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறை வழிபாட்டை மேற்கொண்டால் ஒரு வருடம் இறைவழிபாடு செய்ததற்கு சமமாக சொல்லப்படுகிறது. […]