டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சில மாதங்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23-ம் தேதி போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். இதனால் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வன்முறை பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி […]