கடந்த மாதம் மனுஸ்மிருதி குறித்து திருமாவளவன் பேசிய வீடியோ வைரலாகி பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இதனால், திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில், மனுஸ்மிருதி பற்றி அவதூறாக பேசியதாக கூறி காசிராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது சொந்த அரசியல் லாபத்துக்காக, இந்துக்களை அவமதித்ததுடன், நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சித்த திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க […]