உணவு பாதுகாப்பு குறியீடு பட்டியலில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்வதில், மாநிலங்களின் பாதுகாப்பை அளவிடும் வகையில், உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது. அந்த வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் முதலாவது இடத்திலும், கேரளா 2-வது இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. மேலும், சிறிய […]
இனிமே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாட்சப்பில் முன்பதிவு செய்யலாம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இதுவரை இந்தியாவில், 58,89,97,805 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இனிமேல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாட்ஸப்பில் முன்பதிவு செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது […]
கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தேவையை விட அதிகமாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலையின் பொழுது நாடு முழுவதும் பலருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டது. கறுப்பு பூஞ்சை தொற்றுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்பட்டதால், அந்த மருந்துக்கான தேவை அதிகரித்தது. பலர் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனாவால் பாதிப்படைந்து கருப்பை பூஞ்சை தொற்றால் அவதிப்பட்ட நிலையில் மருத்துவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்ததன் விளைவாக […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தால் அல்லது எளிதில் பாதிக்கப்பட கூடிய மக்களுக்கு வேகமாக பரவினால் மூன்றாம் அலை ஏற்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். கொரோனா மூன்றாம் அலை பாரவல் எப்போது ஏற்படும் என மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், தற்பொழுது நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. எனவே மீண்டும் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டாலும் கூட […]