சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-ஐ போலீசார் பல மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக சென்னையில் 10 பேர் கைதானார்கள். அவர்களுடன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடத்திவந்த போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். சில தினங்களுக்கு முன், கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, […]
கொரோனா தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. குறிப்பாக சென்னையில் நாள் ஒன்றுக்கு 2,500-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தொடர்பான சந்தேகங்களை கேட்க 100 இணைப்புகள் கொண்ட கட்டுப்பாட்டு மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் […]
நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடவுள்ளார். தமிழ் தேசிய புலிகள் கட்சியை பதிவு செய்ய முடியாததால் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடவுள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதைத்தொடர்ந்து, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட மன்சூர் அலிகான் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு சீமான் பரிசீலிக்கவில்லை […]