பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் துப்பாக்கிசூட்டில் சுட்டுக்கொலை. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடைய இரண்டு பேர் அம்மாநில போலீசால் சுட்டு கொல்லப்பட்டனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் 29-ம் தேதி மன்சா மாவட்டத்தில் உள்ள மூஸா என்ற கிராமத்தில் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பஞ்சாப் அரசியலில் […]