என்னை பார்க்க வருபவர்கள் பொன்னாடை போர்த்துவதை தவிர்த்து புத்தகங்கள் வழங்குங்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார். பொதுவாக அரசியல் தலைவர்களை சந்திக்க செல்பவர்கள், அவர்களுக்கு பொன்னாடை போர்த்துவது, பூங்கொத்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ ராஜ் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குமரி மாவட்டத்தில் நூலகங்களுக்கு புத்தகங்கள் தேவைப்படுகிறது.பொதுவாகவே நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடுப்பது வழக்கம்,என்னை சந்திக்க வரும் நண்பர்கள் பொன்னாடைகள் அளிப்பதை தவிர்த்து ஏழை மாணவர்கள் பயன்படும் படி […]