குடியரசுத்தலைவர் தேர்தலில், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துள்ளார். நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி […]
இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க ‘புதிய மன்மோகன்சிங்’ தேவை என சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வரும் நிலையில், பொருளாதாரம் வீழ்ச்சியில் காணப்படுகிறது. இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில் நரேந்திரமோடி பொருளாதார நெருக்கடியை கையாளும் முறை குறித்து, சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெறுவது இந்தியாவின் பொருளாதாரத்துக்கு தேவையான உயிர் […]
சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமராக்கியதற்கு இது தான் காரணம். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தன்னுடைய அரசியல் நினைவு குறிப்பான, ‘ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலம் (the promised land)’ என்ற புத்தகத்தில், இந்திய அரசியல் தலைவர்கள் குறித்து குறிப்பிட்டு உள்ளார்கள். அந்த புத்தகத்தில், காங்கிரஸ் அரசு 2009 முதல் 2014 வரை மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் இருந்தபோது, ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருந்தார். இது குறித்து ஒபாமா தனது புத்தகத்தில் 1990-களில் […]
பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலடி கொடுத்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையுடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் உயிரிழப்பு குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையுடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சீனாவின் மிரட்டலுக்கு அஞ்சக் கூடாது, நமது பகுதியை பாதுகாப்பதில் சமரசம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார். மேலும், ராணுவ […]