ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஸ்வரி மீது வழக்குப்பதிவு. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளை தனி நாடாக சித்தரித்து டுவிட்டர் நிறுவனம் இந்திய வரைபடத்தை வெளியிட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை தனி நாடாக அதில் காட்டியிருந்த இந்த தவறான வரைபடம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களில் இதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவின் தவறான வரைபடத்தை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. […]