Tag: #Manish Sisodia

டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும் ஆத்மி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் முன்னிலை நிலவர முடிவுகள் வெளியாகி வருகின்றன. கிட்டத்தட்ட பாஜக வெற்றியை பதிவு செய்துவிட்ட நிலையில், பாஜக ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில், வெற்றியை உறுதி செய்யும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி […]

#Delhi 4 Min Read
narendra modi HAPPY

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி! 

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும் ஆத்மி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் முன்னிலை நிலவர முடிவுகள் வெளியாகி வருகின்றன. கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடிய ஆம் ஆத்மிக்கு இந்த முறை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ஆட்சியை இழக்கும் […]

#Delhi 4 Min Read
Arvind Kejriwal - Manish sisodia

இதை செய்தால் 24 மணி நேரத்தில் கெஜ்ரிவால் ரிலீஸ் ஆவார்.! சிசோடியா நம்பிக்கை.! 

டெல்லி : ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 17 மாதங்கள் சிறையில் இருந்த சிசோடியாவுக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளியே வந்த மணீஷ் சிசோடியா இன்று டெல்லியில் நடைபெற்ற ஓர் அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டார்.  அப்போது அவர் பேசுகையில், நான் தற்போது ஜாமீனில் வெளியே வந்தது விடுமுறையை கொண்டாட அல்ல. […]

#AAP 4 Min Read
Manish sisodia - Arvind Kejriwal

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்.! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.! 

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் முதல்வருமான மணீஷ் சிசோடியா மீது மதுபான கொள்கை முறைகேடு புகார் பதியப்பட்டு சிபிஐயும், மதுபான கொள்கை புகாரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி அப்போதைய டெல்லி மாநில முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சுமார் 17 மாதங்கள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளார். […]

#AAP 3 Min Read
Manish Sisodia

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா.? தீர்ப்பு தேதி அறிவிப்பு!

Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கே.கவிதா ஆகியோர் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்.26ம் தேதி சிபிஐ கைது செய்தது. அதேசமயம் […]

#AAP 4 Min Read
manish sisodia

மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!

Manish Sisodia: டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ள டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணீஷ் சிசோடியா. இந்த சூழலில் டெல்லியில் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக சிசோடியா மீது குற்றம்சாட்ட […]

#Delhi 4 Min Read
Manish Sisodia

திகார் சிறையில் இருந்து வெளிய வந்த மணீஷ் சிசோடியா..!

டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தற்போது திகார் சிறையில் உள்ளார். சமீபத்தில் டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பான ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், சிறையில் உள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவியைச் சந்திக்க நேற்று தனது வீட்டிற்கு வந்தார். டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மணீஷ் சிசோடியா தனது மனைவியைச் […]

#Manish Sisodia 4 Min Read

பாஜக அலுவலகம்,அமித்ஷாவின் இல்லம் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட வேண்டும் – கடுமையாக சாடிய ஆம் ஆத்மி!

பாஜக தலைமை அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லம் ஆகியவை புல்டோசர் கொண்டு இடிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக  சாடியுள்ளது. டெல்லி,ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த வாரம் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு சமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் போலீசார் உட்பட பலரும் காயமடைந்தனர்.இதனால்,வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார். ஆக்கிரமிப்பு […]

#AAP 7 Min Read
Default Image

“வருகின்ற 29 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்”- அரசு அதிரடி அறிவிப்பு!

டெல்லி:வருகின்ற 29 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லியில்,சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதித்துள்ள நிலையில்,வருகின்ற திங்கட்கிழமை முதல் டெல்லியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,உதவி பெறாத அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “டெல்லியில் உள்ள […]

#Delhi 2 Min Read
Default Image

மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்த கூடாது – மணீஷ் சிசோடியா!

பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி மாணவர்களை பள்ளிக்கு வர சொல்ல கூடாது என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதிலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் கொரோனாவை தடுக்கும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசிகள் போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது போல தலைநகர் டெல்லியிலும் கொரோனாவை ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் விளைவாக […]

#Manish Sisodia 4 Min Read
Default Image

டெல்லி துணை முதல்வர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.!

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசொடியா கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர்-14 ஆம் தேதி கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசொடியாவுக்கு டெங்கு பாதிப்பும் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்து நிலையில்,  இன்று அவர் மேக்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது, அவருக்கு ஒரு வாரம் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ளமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக டெல்லி துணை முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

#Delhi 2 Min Read
Default Image

மணீஷ்சிசோடியாவுக்கு கொரோனா-டெங்கு!! மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டில்லி துணை முதல்வர் மணீஷ்சிசோடியாவுக்கு டெங்கு பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது . டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கடந்த செப் 14ந்தேதி  கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டது.இந்நிலையில் தன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.அதன் பிறகு திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த புதன் கிழமை டில்லி லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா பாதித்த அவருக்கு டெங்குவாளும் அவர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் அவருடைய உடல்நிலை சீராக […]

#DengueFever 3 Min Read
Default Image

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா உறுதி.!

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்த நிலையில், பரிசோதனை செய்த போது தொற்று இருப்பது உறுதியானது. டெல்லி துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்த நிலையில், பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் என்னை நானே தனிமைப்படுத்தியுள்ளேன். தற்போது காய்ச்சலோ வேறு பிரச்னையோ இல்லை. நான் நலமுடன் உள்ளேன். விரைவில் உங்கள் ஆசிர்வாதங்களுடன் பணிக்குத் […]

#Manish Sisodia 3 Min Read
Default Image

600 படுக்கைகளுடன் டெல்லி காமன்வெல்த் விளையாட்டு மைதானத்தில் கொரோனா சிகிச்சை மையம்.!

டெல்லியில் உள்ள காமன்வெல்த் விளையாட்டு மைதானத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொரோனா சிகிச்சை மையத்தை உருவாகியுள்ளனர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மராட்டியம் மற்றும் தமிழகத்திற்கு அடுத்தபடியாக டெல்லி அதிக கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை கொரோனாவால் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

#Manish Sisodia 4 Min Read
Default Image

டெல்லியில் ஜூலை 31 க்குள் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை சுமார் 5.5 லட்சமாக அதிகரிக்கும்- துணை முதல்வர்!

டெல்லியில் ஜூலை 31ம் தேதிக்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 5.5 லட்சமாக அதிகரிக்கும் என அம்மாநில துணை முதல்வனர் தெரிவித்தார். டெல்லியில் நாளுக்கு நாள் கொரோன வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29,943 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 874 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், டெல்லி மாநிலத்தின் துணை முதல்வரான மனிஷ் சிசோடியா, டெல்லியில் […]

#Manish Sisodia 2 Min Read
Default Image

டெல்லிக்கு 5,000 கோடி தேவை ! பேரிடர் நிவாரண நிதி இன்னும் வரவில்லை – மனீஷ் சிசோடியா

டெல்லி அரசானது தனது ஊழியர்களுக்கு ஊதியம்  அளிக்கவும் கொரோனா பாதிப்பிலிருந்து மீளவும்  அதை சமாளிக்க 5000 கோடி தேவை என்று அம்மாநில துணைமுதல்வர் மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.   டெல்லியின் துணை முதல்வரான மனீஷ் சிசோடியா மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார் . அதில் அவர் பேரிடர் நிவாரண நிதியத்தின் கீழ் மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிதியை டெல்லி அரசு பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் . மேலும் அவர் கூறுகையில் எங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் […]

#Manish Sisodia 3 Min Read
Default Image

10, 12 தேர்வு நடத்த வாய்ப்பில்லை மணிஷ் சிசோடியா.!

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த வாய்ப்பில்லை என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதால் முதற்கட்டமாக 21 நாள்களுக்கு பிறப்பித்த ஊரடங்கு மேலும்,  19 நாள்களுக்கு பிரதமர் மோடி நீடித்து உத்தரவு பிறப்பித்தார். இதையெடுத்து, ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் கூடம் இடங்கள் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் பல பள்ளிகளில் 9 -ம் வகுப்புகள் வரை அனைத்து மாணவர்களுக்கு […]

#Delhi 4 Min Read
Default Image

முதலில் பின்னடைவு ,சிறிது நேரத்தில் முன்னிலை ! ஒருவழியாக வெற்றிபெற்ற டெல்லி துணை முதல்வர்

டெல்லி பட்பர்கஞ் தொகுதியில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 69652 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.அதன்படி  டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.எனவே டெல்லி துணை […]

#Manish Sisodia 3 Min Read
Default Image