இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதனால், பல இடங்களில் வீடுகள், அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த மோதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னும் கூட பதற்றம் முழுமையாக ஓய்ந்தபாடில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாக மணிப்பூரில் பதற்றம் […]
சென்னை : ஆம் ஆத்மி கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த கைலாஷ் கேலோட். நேற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகி, ஒரே நாளில் பாஜகவில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில், அதிமுக தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என பேசப்பட்டு வந்த நிலையில், ‘திமுகவுடன் கூட்டணி இல்லை எனவும் அதிமுகவுடன் கூட்டணி குறித்த இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது எனவும்’, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையேயான மோதல் கடந்த மே மாதம் தீவிரமடைந்தது. அதன் பிறகு, குறிப்பிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது பிரச்சனை சற்று குறைந்து இருந்தது. இருந்தாலும், இன்னும் சில இடங்களில் அங்கங்கே தாக்குதல்கள் நடைபெற்றாலும், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாத நிலை இருந்து வந்தது. இப்படியான சூழலில் நேற்று மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் குக்கி இன […]
சென்னை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவை வந்திருந்தார். அப்போது சிறுகுறு தொழிலதிபர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்வில் அன்னப்பூர்ணா சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தது முதல் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு வரையில் சமூக வலைதளத்தில் டாப் ட்ரெண்டில் இருக்கிறார் நிர்மலா சீதாராமன். ஸ்வீட் – காரம் : கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவையில் நடைபெற்ற சிறுகுறு, நடுத்தர மற்றும் ஹோட்டல் தொழிலதிபர்கள் உடனான […]
டெல்லி: பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது M வரிசையில் மணிப்பூர் என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தவில்லை என மக்களவையில் TMC எம்பி மஹுவா மொய்த்ரா விமர்சித்துள்ளார். இன்று மக்களவை கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். அப்போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா ஆளும் பாஜக அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், கடந்த முறை என்ன யாரும் பேச அனுமதிக்கவில்லை. […]
மணிப்பூரில் உள்ள மெய்தி இனத்தை சேர்ந்த மக்கள், தங்கள் இனத்தை சேர்ந்தவர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மெய்தி இனத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்த்தால் தங்கள் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் என ஏற்கனவே பழங்குடியினர் பிரிவில் இருக்கும் குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, மணிப்பூர் உயர்நீதிமன்றம், மெய்தி இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை தொடர்ந்து, […]
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இன்று இரண்டாம் கட்டமாக ஒற்றுமை யாத்திரையை,” இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” எனும் பெயரில் மணிப்பூர் மாநிலம் தவுபல் மாவட்டத்தில் இருந்து துவங்கியுள்ளார். கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி துவங்கிய இந்த யாத்திரை தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி.! 67 நாட்கள்.! 6,713 கிமீ பயணம்.! இந்த விழாவில் ராகுல்காந்தி பேசுகையில், நான் 2004 முதல் அரசியலில் உள்ளேன், முதல்முறையாக இந்தியாவில் […]