மணிப்பூரில் உள்ள மெய்தி இனத்தை சேர்ந்த மக்கள், தங்கள் இனத்தை சேர்ந்தவர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மெய்தி இனத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்த்தால் தங்கள் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் என ஏற்கனவே பழங்குடியினர் பிரிவில் இருக்கும் குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, மணிப்பூர் உயர்நீதிமன்றம், மெய்தி இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை தொடர்ந்து, […]
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை அடுத்து மணிப்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் மெய்தி சமுதாயத்திற்கு பழங்குடிய அந்தஸ்து வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில், இவர் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.