மணிப்பூர் சுகாதாரத்துறை மந்திரி எல் ஜெயந்தகுமாரின் உறவினர் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் பிஷும்தோங் பகுதியில் உள்ளவர்கள். நேற்று ஜெயந்தகுமார் ஒரு பேஸ்புக் பதிவில், கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான இந்த முக்கியமான போராட்டத்தின் போது, எனது உறவினர்களில் ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எனது அலுவலக ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்க ளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், நானும் எனது ஊழியர்களும் அனைவரும் […]