மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. அசாமின் எல்லையோர மாவட்டத்தில் குக்கி தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சிலரும் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்தேகத்திற்குரிய குகி தீவிரவாதிகள் ஜிரிபாமில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் மீது முதலில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பிறகு, பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையத்தை ஒட்டி உள்நாட்டில் […]