சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல் நாளில் அதிகாலை முதலே தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தில் உள்ள உச்சிஸ்ட கணபதி கோயிலில் சித்திரை முதல் நாளில் மட்டும் சுவாமி மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெறும். இதனைக் காண அப்பகுதியில் உள்ள பக்தர்கள் மணிமூர்த்தீஸ்வரம் குவிந்துள்ளனர். […]