மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக வரும் செய்தி தவறானது என முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் தெரிவித்தார். திருப்பூரில் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் இன்று அதிமுக எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் என தகவல் வெளியானது. இதுகுறித்து சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் கூறுகையில், மீண்டும் […]