ஆன்லைன் விளையாட்டிற்கு விதிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு எதிராக பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ். ஆன்லைன் விளையாட்டினால் அதிக தற்கொலைகள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. தற்போது இந்த அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டிற்க்கான தடை அவசர சட்டம் இன்னும் அமலுக்கு வராத காரணத்தால், வழக்கு போட வேண்டிய தேவை இல்லை […]