மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல். மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மாண்டஸ் புயலால் தமிழ்நாட்டில் 35,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அண்மையில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்த மாண்டஸ் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், […]
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் நகர்வதால் தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் வலு குறைந்து உள் மாவட்டங்களில் நகர்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் நகர்வதால் தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் […]
மாண்டஸ் புயலால், தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி. மாண்டஸ் புயலால் சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கு உரிய நிவரப்பினம் வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் அறிவித்துள்ளார். கட்டுமரம் முழுமையாக சேதமானால் ரூ.32 ஆயிரமும், பகுதி சேதமானால் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். 2 முதல் 3 நாட்களில் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் கூறுகையில், மாண்டஸ் புயலால் தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை. இருப்பினும் மீட்பு […]
புயல் பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இன்று அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை. அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்ற மாண்டஸ் பின்னர் சாதாரண புயலாக வலுவிழந்தது. இதன்பின் நேற்றிரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கி, சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் […]
மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது மாமல்லபுரத்திற்கு 30 கி.மீ. தொலைவில் மாண்டஸ் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Cyclonic storm ‘Mandous’ over southwest Bay of Bengal lay centred at 2230 IST of today (09.12.2022) at about 30 km southeast of Mamallapuram. Inner spiral bands are entering the land. However, the system centre is still in […]
தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார். ஏற்கனவே புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்சாரம் தொடர்பான பாதிப்புகளை சரிசெய்ய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கவும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மாண்டஸ் புயல் இன்றிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஏற்கனவே 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 16 விமானங்கள் ரத்து. தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது சென்னையில் மேலும் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 72 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் என்னும் சிறிய வகை விமானங்கள் தான் ரத்து செய்யபட்டுள்ளது. தூத்துக்குடி, மைசூரு, கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை […]
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு. மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வேலூர், திருப்பூர், […]
மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு. தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் எதிரொலியால் 27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், மாண்டஸ் புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, […]
சென்னையில் இருந்து 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாண்டஸ் புயல் 10 கிமீ வேகத்தில் நகர்வு. வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலில் இருந்து சாதாரண புயலாக வலுவிழந்தது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆராச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த மாண்டஸ் புயலால் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. […]
கனமழை காரணமாக தமிழ்நாட்டில் நான்கு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், புயல் மற்றும் கனமழை காரணமாக வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு […]
மாமல்லபுரத்திற்கு 180 கிமீ தென்கிழக்கில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை நெருங்கி வருகிறது. மாமல்லபுரத்திற்கு 180 கிமீ தென்கிழக்கில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கே 260 கிமீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று முதல் நாளை அதிகாலை வரை மணிக்கு 60 – 70 கிமீ […]
அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் மாண்டஸ் புயல் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் டெல்டா மாவட்டங்கள், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுபோன்று அடுத்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும். மேலும், நாளை […]
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தம் என அம்மாநில அரசு அறிவிப்பு. மாண்டஸ் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று புதுச்சேரியில் இருந்து காரைக்கால் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது என்று புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்த பிறகு புதுச்சேரியில் இருந்து சென்னை, காரைக்காலுக்கு பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செங்கல்பட்டு பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர புயல் மாண்டஸ் வலுவிழந்து, சாதாரண புயலாக மாறியுள்ளது. இந்த மாண்டஸ் புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காரைக்காலில் இருந்து 180 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 260 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்றிரவு முதல் நாளை காலை வரை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும். மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் […]
மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதால், தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால் இன்று 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வருவதால், தமிழகத்தின் செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பிஅய்க்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]
மாண்டஸ் புயல் காரணமாக பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு என அறிவிப்பு. தமிழகத்தில் மாண்டஸ் புயல் எதிரொலியால் பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அண்ணா, சென்னை, அண்ணாமலை, திருவள்ளூர், எம்ஜிஆர், பாரதிதாசன், சட்ட பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அந்தந்த பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுபோன்று, பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதே கால அட்டவணைப்படி வரும் 16-ஆம் தேதி […]
புயல், கனமழை எச்சரிக்கையால் தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் இந்த புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புயல், கனமழை எச்சரிக்கையால் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், […]
மாண்டஸ் புயல் எதிரொலி வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாண்டஸ் புயல் எதிரொலியாக மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை […]