மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள அனைவரும் தங்களது ஆதார் எண்ணை அடையாள அட்டை எண்ணுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இணைக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைத்து திட்டங்களிலும் பயனடைய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றுள்ள அனைவரும் தங்களது […]
ராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், விடுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என UGC உத்தரவு. ராகிங்கைத் தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று UGC உத்தரவிட்டுள்ளது. ராகிங்கைத் தடுக்க உயர்கல்வி நிறுவன வளாகங்கள், வகுப்பறைகள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை மணியையும் முக்கிய இடங்களில் பொருத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உத்தரவிட்டுள்ளது. ராகிங்கிற்கு எதிரான […]
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயம். டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கப்படுகிறது. அங்கு கொரோனா அதிகரித்து வரும் மத்தியில், இந்த அறிவிப்பை டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) அறிவித்துள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 632க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், நேர்மறை விகிதம் 4.42%-ஐ […]
இரவில் உடற்கூராய்வுகளை நடத்த அனுமதி.ஆனால்,அவற்றை கட்டாயம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நமது நாட்டில் விபத்துகளில் இறந்தவர்களின் உடல்கள் பொதுவாக பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன.இந்நிலையில்,மத்திய அரசு நேற்று பிரேத பரிசோதனைகளுக்கான (உடற்கூராய்வு) நெறிமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.அதன்படி,உடல் உறுப்பு திருட்டை தடுக்க இரவு நேர பிரேத பரிசோதனைகளுக்கு வீடியோ பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக,மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “உடல் உறுப்பு திருட்டை […]
தமிழகத்தில் இன்று முதல் ‘இ-பதிவு’ கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது திருமணத்திற்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதியில் இருந்து மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால்,முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்காமல்,கூட்டம் கூட்டமாகவும்,சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக,தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.அதன்படி,அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 வரை மட்டுமே […]