திருச்சி மணப்பாறை அடுத்து மகிளிப்பட்டியை சேர்ந்த ரமணி மற்றும் லட்சுமி இரு பெண்கள் அப்புகுதியை அடுத்து ஒரு குளத்தில் குளிக்க சென்றுள்ளார்கள். குளித்து கொண்டிருந்த பொது நிலை தடுமாறி இருவரும் தண்ணிரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதனை கண்ட அக்கபக்கத்தினர் மீட்பு பணியாளர்களை வர வைத்து இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர். சுஜித் இரங்கல் குறித்து கருத்து தெரிவிக்கையில், ராகவா லாரன்ஸ் கூறுகையில், ‘ பெற்றோர் இல்லாத ஒரு குழந்தையை தத்தெடுத்து அச்சிறுவனுக்கு சுஜித் என பெயர் விடுங்கள். அச்சிறுவனின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ‘ என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர். அந்த வகையில் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நடக்ககூடாதது நடந்துவிட்டது. எனவும், உலகத்தின் மிகப்பெரிய சவக்குழி இதுதான் என கூறியிருந்தார். மரணத்தில் பாடம் கற்று கொள்வது மடமைத்தனம்! மரணத்திலும் கற்று கொள்ளாமல் இருப்பது அடிமை தானம் […]
திருச்சி மணப்பாறை அருகே உள்ள கிராமத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுஜீத் தவறி விழுந்தான். அவனை மீட்கும் பனியில் தற்போது பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரிக் இயந்திரம் மூலம் சுஜீத் தவறி விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பெரிய துளையிடப்பட்டு அதன் வழியே மீட்பு படை வீரர்கள் சென்று பக்கவாட்டில் துளையிட்டு சிறுவனை காப்பாற்ற பட உள்ளான். தற்போது மீட்பு படை வீரர் அஜித்குமார் என்பவர் தோண்டப்பட்ட […]
திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2வயது சிறுவன் சுஜீத்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 3 நாட்கள் கடந்தும் போராடி வருகின்றனர். சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ரிக் எந்திரம் மூலம் துளையிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 55 அடிக்கும் மேல் தோண்டப்பட்ட குழிக்குள் மீட்பு படை வீரர் இறங்கி அங்குள்ள பாறைகளை ஆய்வு செய்ய இறக்கப்பட்டார். பாதுகாப்பு உபகாரணங்களோடு குழிக்குள் இறங்கிய அவர் அங்கிருந்து ஆய்வுக்காக கல் எடுத்து வந்தார்.
மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது தாலுகா மாநாடு நேற்று நடந்தது. வட்ட குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சரஸ்வதி ராஜாமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.இந்த மாநாட்டில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டுமென தீர்மானம் இயற்ற்றபட்டது. மாவட்டகுழு உறுப்பினர் தர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பெரியகுளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ லாசர் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் நடந்த நிர்வாகிகள் தேர்தலில் புதிய வட்ட செயலாளராக ராஜகோபால், வட்டக்குழு உறுப்பினர்களாக சீனிவாசன், […]