உலகம் கொரோனாவிலிருந்து விடுபட மணக்குள விநாயகர் அருள் புரிவார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வாழ்த்து கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக முதல்வரின் அறிவுறுத்தல் படி கட்டுப்பாடுகளுடன் சில இடங்களில் எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் இன்று சாமி தரிசனம் செய்துள்ளார். வழிபாடு […]