“கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை நீக்க மாட்டோம்” ,என்று பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,இதனைத் தொடர்ந்து,சமூக ஊடகங்கள் அதன் கொள்கையின் ஒரு பகுதியாக,கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் தங்கள் தளங்களில் பரப்பப்படுவதை தடை செய்தன. இந்நிலையில்,கடந்த 2019-ம் ஆண்டில் கொரோனா பரவுவதற்கு முன்பாகவே சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் உள்ள மூன்று விஞ்ஞானிகள்,கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் […]