வெனிசுலா நாட்டில் விநோதமான மனித முக வடிவத்துடன் ஒரு பன்றிக்குட்டி பிறந்துள்ள நிகழ்வானது அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.மக்கள் திரண்டு இந்த பன்றிக்குட்டியை பார்த்து வருகின்றனர். வெனிசுலா நாட்டில் கரோரா என்கிற பகுதியில் பிறந்த இந்த பன்றிக் குட்டிக்கு மனிதர்களைப் போலவே கண்களும், முடியும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் இதனை அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் உரிமையாளரின் இந்த தகவலை அடுத்து அங்கு வந்த பலரும் அந்த பன்றிக் குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்தது மட்டுமல்லாமல் புகைப்படங்களை எடுத்தனர். […]