மம்தா பானர்ஜி தனது வாக்கு வங்கிக்காக இறந்த உடல்களை வைத்து கூச் பகுதியில் பேரணி நடத்துகிறார்,என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.இதில்,நான்காம் கட்ட வாக்குப் பதிவானது ஏப்ரல் 10 ம் தேதி நடைபெற்ற போது,கூச் பெஹார் மாவட்டத்தின் சீதகுல்ச்சியில் ஒரு வாக்குச் சாவடியில் வன்முறை வெடித்தது.இதனையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா […]
இந்திய நாடாளுமன்ற இரு அவைகளிலும், பலத்த எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த மசோதா சட்டமானது. இந்தமசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே.வங்க முதல்வர் ஆவேச கருத்து. இந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்கலான அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் டெல்லி, அலிகார் உள்ளிட்ட முக்கய நகரங்களிலும் தற்போது போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்த போராட்டத்தின் விளைவாக மேற்கு வங்க மாநிலத்திலும் போராட்டம் தலை விரித்து ஆடுகிறது. இந்த […]
தமிழகத்தின் தந்தையாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி அவர்களின் முதலாமாண்டு நினைவு தின பொதுக்கூட்டம் சென்னை ஒய்.எம்.சி மைதானத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் கலைஞர் நினைவை போற்றும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி , புதுவை முதல்வர் நாராயணசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய மம்தா, கருணாநிதி எப்போதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பியவர் […]
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாளை நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பேனர்ஜி நேற்று இரவு சென்னை வந்தார். சென்னை வந்த அவர் அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். சந்திப்பின் போது வள்ளுவரின் சிலையையும் மற்றும் ஒரு பரிசு பொருளையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.